உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#steam #india2020
விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை

உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)

#steam #india2020
விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150 கிராம்வெள்ளை உளுந்து
  2. 3வரமிளகாய்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. 1/2 மூடிதேங்காய் துருவல்
  5. எண்ணெய்
  6. 1 ஸ்பூன்கடுகு
  7. 1 ஸ்பூன்வெள்ளை உளுத்தம்பருப்பு
  8. 3 கொத்துகறிவேப்பிலை
  9. பெருங்காயம்
  10. 11/2 கப்இடியாப்ப மாவு
  11. வெந்நீர் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் வரமிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து(உடைந்து கொழகொழப்பாக இருந்தால் போதும்) எடுக்கவும்.

  2. 2

    வானொலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பின் பொரித்து பின் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பின் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்..

  3. 3

    பின்னர் அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.. தேவைக்கேற்ப சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    காந்தி விடக்கூடாது..

  5. 5

    5 நிமிடம் வதக்கிய பின் ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும். ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

  6. 6

    இப்போது பூரணம் தயாராகி விட்டது.

  7. 7

    இடியாப்ப மாவு/கொழுக்கட்டை மாவு 11/2 கப் எடுத்து அதில் வெந்நீர் சிறிது சிறிதாக ஊற்றி அரை உப்பு சேர்த்து கிளறவும். (குறிப்பு : ஒரேயடியாக வெந்நீர் ஊற்றினால் மாவு பற்றாமலும் பின் நீர் பற்றாமலும் மாறி மாறி மாவின் பதம் சரியான முறையில் அமையாது.)

  8. 8

    கிளறிய மாவை சிறிது தட்டையாக்கி பின் அதனுள் உருட்டி வைத்துள்ள பூரணத்தை வைத்து மோதகம் போல் செய்து கொள்ளவும்.

  9. 9

    மீதமுள்ள உருண்டைகளுக்கும் மேற்சொன்ன வழிமுறையை பின்பற்றி கொழுக்கட்டை களை செய்து கொள்ளவும்.

  10. 10

    கொழுக்கட்டை மேக்கர் பயன்படுத்தியும் செய்யலாம்.

  11. 11

    செய்த கொழுக்கட்டை களை இட்லி பானையில் வேகவைக்கவும்.

  12. 12

    பத்து நிமிடத்தில் கார கொழுக்கட்டை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

Similar Recipes