இலை அடை\இலை பனியாரம் (Elai adai recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

இலை அடை\இலை பனியாரம் (Elai adai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்அரிசி மாவு
  2. 1கப்தேங்காய் துருவல்
  3. 1கப்மண்டை வெல்லம்
  4. வாழை இலை-தேவைக்கு ஏற்ப
  5. 1\4ஸ்பூன்ஏலக்காய்த்தூள்
  6. உப்பு- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்சிங் பௌலில் அரிசி மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    வெல்லப் பாகை அடுப்பில் வைத்து கொதி வந்ததும் அதனுடன் தேங்காய் துருவல் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளரி கிளரி வற்றி சுருண்டு பூரண பதம் வரும் வரை வைத்து இறக்கவும். பூரணம் ரெடி

  5. 5

    வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அடுப்பில் வாட்டி எண்ணெய் தடவி எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    பிறகு இலையில் ஸ்பூனால் மாவை எடுத்து சிறிதளவு பரவலாக வைக்கவும். அதன் நடுவே சிறிதளவு பூரணம் வைக்கவும்.

  7. 7

    இதனை மெதுவாக மூடவும். இதேபோல் எல்லா இலைகளிலும் மாவையும் பூரணத்தை வைத்து இலையை மடக்கவும்.

  8. 8

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி தட்டில் இலைகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து இலையுடன் ஒவ்வொன்றாக எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes