சிக்கன் உருளைக்கிழங்கு சீஸ் உருண்டை / chicken potato cheese balls recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
9 பரிமாறுவது
  1. 1/4 கிலோ எலும்பில்லாத சிக்கன் (2 கப் வேகவைத்து பிச்சுபோட்ட சிக்கன்)
  2. 2வேக வைத்த உருளைக்கிழங்கு (1 கப் மசித்த உருளைக்கிழங்கு)
  3. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1/2டீஸ்பூன்கரம் மசாலா
  5. உப்பு
  6. நறுக்கிய கொத்தமல்லி இலை
  7. 9 சதுரமாக வெட்டிய மொஸரெல்லா சீஸ்
  8. 1முட்டை
  9. 1 கப் பிரெட் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் கழுவிய சிக்கனை சேர்த்து அதனுடன் தண்ணீர் உப்பு சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும் பிறகு வெந்த சிக்கனை தண்ணீர் இல்லாமல் பிச்சு போட்டு எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு நறுக்கிய கொத்தமல்லி உப்பு சேர்க்கவும்

  3. 3

    அதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் பிறகு சிறிது எடுத்து படத்தில் காட்டியவாறு தட்டையாக முதலில் தட்டிக் கொள்ளவும்

  4. 4

    பிறகு அதில் வெட்டி வைத்த சீஸ்ஸை உள் வைத்து நன்றாக மூடி உருண்டையாக உருட்டி கொள்ளவும்

  5. 5

    உருட்டி வைத்த உருண்டைகளை உடைத்து ஊற்றிய முட்டையில் நன்றாகத் தேய்த்து பிறகு பிரெட் தூளில் எல்லா இடங்களிலும் பரவுமாறு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    அனைத்து உருண்டைகளையும் இதுபோல் செய்து 15 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும்

  7. 7

    இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை நன்றாக காய வைக்கவும் எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மிதமான தீயில் மாற்றி உருண்டைகளை சேர்த்து மிதமான மற்றும் குறைந்த தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் உருண்டைகளை போட்டோவுடன் கிளற கூடாது 15 வினாடிகள் கழித்து மெதுவாக கிளறி விடவும் எல்லா பக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும்

  8. 8

    இதேபோல் எல்லா உருண்டைகளையும் பொரித்தெடுக்கவும்

  9. 9

    அசத்தலான சிக்கன் உருளைக்கிழங்கு சீஸ் உருண்டை தயார்

  10. 10

    நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes