தேவையான பொருட்கள்

45mins
2 பரிமாறுவது
  1. 1படி பச்சரிசி
  2. 1ஆழாக்கு உளுந்து பருப்பு
  3. 1கை பொட்டுக்கடலை
  4. உப்பு
  5. 1/2டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  6. 4டேபிள்ஸ்பூன் வெள்ளை எள்ளு
  7. முறுக்கு பொரிப்பதற்கு தேவையான ஆயில்

சமையல் குறிப்புகள்

45mins
  1. 1

    1படி பச்சரிசி எடுத்து வைக்கவும். 1 ஆழாக்கு உளுந்து பருப்பை வெறும் கடாயில் நன்கு வறுத்து விடவும். 1 கை அளவு பொட்டுக்கடலையை வறுத்து விடவும்.இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து விடவும். அரைத்த மாவை சலித்து ஆறவிடவும். தேவையான அளவு உப்பு வெள்ளை எள்ளு 4 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி விடவும். தேன்குழல் முறுக்கு சுடுவதற்கு தேவையான மாவை எடுத்து தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான ஆயில் சேர்த்து சூடேற்றவும். 2 டேபிள் ஸ்பூன் அளவு சூடான ஆயிலை மாவில் சேர்த்து பிசையவும். தேன்குழல் முறுக்கு அச்சில் மாவை நிரப்பி முறுக்காக பிழிந்து ஆயில் காய்ந்தவுடன் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  3. 3

    இருபுறமும் திருப்பி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். கடாயில் இருக்கும் எண்ணெயின் சலசலப்பு அடங்கியவுடன் எடுத்துவிடவும். சுவையான தேன்குழல் முறுக்கு ரெடி😄😄

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes