குல்கந்து ரோஸ் மோமோ (Kulkanthu rose momos recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

குல்கந்து ரோஸ் மோமோ (Kulkanthu rose momos recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
1 நபர்
  1. 1 கப் மைதா மாவு
  2. 3 ஸ்பூன் குல்கந்து
  3. 1/2 ஸ்பூன் உப்பு
  4. 1 ஸ்பூன் எண்ணெய்
  5. சிறிதளவுஃபுட் கலர்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மைதா மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.அத்துடன் ஃபுட் கலர் மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

  2. 2

    இப்போது அதை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் தட்டி கொள்ளவும்.

  3. 3

    வட்டவடிவில் மூன்று மூடிகளை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதை திரட்டிய சப்பாத்தி மேல் வைத்து வட்டம் வடிவமாக அமைக்க எடுத்துக் கொள்ளவும். மூன்றும் வெவ்வேறு அளவில் எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்போது பெரிய வட்டத்தில் மேல் இரண்டாவது வட்டத்தை நடுவில் வைத்து பிறகு மூன்றாவது வட்டத்தை இரண்டாவது வட்டத்தில் நடுவில் வைத்துக் கொள்ளவும். ஒன்றின் மேல் ஒன்று வைக்கவும்.

  5. 5

    குல்கந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்போது குல்கந்து கலவை நடுவில் நீட்டமாக வைத்துக் கொள்ளவும்.

  7. 7

    அதை வலது புறமாக மடித்துக் கொள்ளவும்.

  8. 8

    இப்போது இடது புறத்திலிருந்து சுருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  9. 9

    இதேபோல் அனைத்தையும் சுருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  10. 10

    பிறகு இட்லி பாத்திரத்தில் 5 லிருந்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குல்கந்து ரோஸ் மோமோஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
KalaiSelvi G
அன்று

Similar Recipes