கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)

Lakshmi
Lakshmi @cook_25014066

இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1 கிலோ மட்டன்
  2. 1 கிலோபாசுமதி அரிசி
  3. 5 பெரிய வெங்காயம்
  4. 4தக்காளி
  5. 2பச்சைமிளகாய்
  6. 1/2கட்டு புதினா கொத்தமல்லி
  7. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1ஸ்பூன் மல்லிதூள்
  9. அரைக்க
  10. 2ஸ்பூன் கசகசா
  11. 2ஸ்பூன்சோம்பு
  12. 10சின்ன வெங்காயம்
  13. 19 கிராம்பு
  14. 5ஏலக்காய்
  15. 1 பட்டை
  16. 1அன்னாசிபூ
  17. 1 துண்டு இஞ்சி
  18. 8பற்கள்பூண்டு
  19. 1/2 கப் தயிர்
  20. உப்பு தேவைக்கேற்ப
  21. தாளிக்க
  22. பிரியாணி இலை
  23. எண்ணெய் தே.அளவு
  24. 100 நெய்
  25. 1 எலுமிச்சம்பழம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மட்டனை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அரைக் கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் அரைத்து கொள்ளவும்.

  2. 2

    மட்டனில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிசறி 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.பிறகு ஒரு குக்கரில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்த மட்டனையும் சேர்த்து வதக்கவும் நன்றாக வதக்கவும்.

  3. 3

    பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு விசில் விட்டு இறக்கி வைக்கவும்.ஊற வைத்த அரிசி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதில் புதினா கொத்தமல்லி இலைகளை சேர்த்து

  4. 4

    நன்றாக கொதித்தவுடன் மூடி பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi
Lakshmi @cook_25014066
அன்று

Similar Recipes