இலஞ்சி முட்டை சுருள் (Elanchi Egg Roll) (Elanchi muttai roll recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#kerala
#ilovecooking
தேங்காய் மற்றும் இனிப்பு சேர்ந்த சுருள் கேரளா வகை உணவு.

இலஞ்சி முட்டை சுருள் (Elanchi Egg Roll) (Elanchi muttai roll recipe in tamil)

#kerala
#ilovecooking
தேங்காய் மற்றும் இனிப்பு சேர்ந்த சுருள் கேரளா வகை உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. அரை மூடிதேங்காய்
  2. 3ஏலக்காய்
  3. 4 ஸ்பூன்நாட்டுச்சக்கரை
  4. 4 to 5 ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  5. ஒரு கப்கோதுமை மாவு
  6. 1முட்டை
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. தேவையானஅளவு உப்பு
  9. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் நாட்டுச்சக்கரை மற்றும் ஏலக்காயை சேர்த்து பொடி செய்து, வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  2. 2

    அந்தக் கலவையுடன் துருவிய தேங்காய் பூவை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

  3. 3

    அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி விடவும்.

  4. 4

    அந்த முட்டையில், ஒரு கப் கோதுமை மாவு, கால் ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக தண்ணீர் பதமாக கலந்து கொள்ளவும்.

  5. 5

    கலந்த மாவை தோசைக்கல்லில் தோசை போல் ஊற்றி தேங்காய் எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    அந்த தோசையை ஒரு தட்டில் வைத்து, தேங்காய் பூரணத்தை நடுவில் வைத்து இருபுறமும் ஓரங்களை மடித்து..

  7. 7

    சுருள் போல உருட்டி வைக்கவும்.

  8. 8

    முட்டை சுருளை இரண்டாக வெட்டி பரிமாறவும்.. சுவையான கேரள வகை இலஞ்சி முட்டை சுருள் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes