ஆலு பரோட்டா(Aloo paratha)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#GA4
Week 1
potato

ஆலு பரோட்டா(Aloo paratha)

#GA4
Week 1
potato

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. கோதுமை மாவு 2 கப்
  2. 4உருளைக்கிழங்கு வேக வைத்தது
  3. சீரகம் அரை ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 1
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
  8. கரம் மசாலா அரை ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கொத்தமல்லி இலை சிறிதளவு
  12. எண்ணெய் / நெய் 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்,.. மாவு காயாமல் இருக்க எண்ணெய் தடவிக் கொள்ளவும்,..

  2. 2

    ஒரு கடாயில்,ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், சீரகம்,நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,போட்டு வதக்கிக் கொள்ளவும்,... வதங்கியவுடன் மிளகாய் தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,சேர்த்து வதக்கிக் கொள்ளவும்,....

  3. 3

    பின்னர் அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்,.... ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்,...

  4. 4

    மாவை உருண்டைகளாக உருட்டி,சப்பாத்தி கல்லில் கனமாக தேய்த்து, நடுவில் மசாலாவை வைத்து கொள்ளவும்,....

  5. 5

    மசாலாவை மூடி,தேய்த்து கொள்ளவும்,இதே போல் எல்லா மாவையும் செய்து கொள்ளவும்,...

  6. 6

    தோசைக்கல்லில் தேய்த்து வைத்த பரோட்டாவை போட்டு,நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவைத்து, எடுத்துக்கொள்ளவும்,... சுவையான ஆலு பராத்தா தயார்,...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes