மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)

#karnataka
இது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை மற்றும் புழுங்கல் அரிசியை கழுவி 2 மணி நேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைக்கவும். அவலையும் தனியாக ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பு தலா 2 ஸ்பூன் ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊற வைத்த பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும். ஆறு மணி நேரம் புளிக்கவைத்து கொள்ளவும்.
- 2
ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும் 10 பல் பூண்டு தோலுரித்து வைத்துக் கொள்ளவும். ஆறு வரமிளகாய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடலைப்பருப்பை போட்டு லேசாக சிவக்க விடவும்.பின் அதில் பூண்டு பல், வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.குறைவாக உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். தோசை க்குள் வைக்க சட்னி தயார்.
- 3
நான்கு உருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேக வைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம்,இஞ்சி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். லேசாக உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை வதங்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு மசியும் வரை சூடுபடுத்திக் கொள்ளவும்.
- 4
தோசை மாவில் தோசை ஊற்றுவதற்கு முன் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 ஸ்பூன் ரவை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 5
சட்னி, மசால்,தோசை மாவு,நெய், எண்ணெய் அனைத்தையும் ரெடியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை சூடுபடுத்தவும். பிறகு ஒரு கரண்டி மாவை தோசைக்கல்லில் ஊற்றி நன்கு தேய்த்து எண்ணெய் சுற்றி விடவும். கொஞ்சம் மாவு வெந்தவுடன் அரைத்த பூண்டு சட்னியை தோசை மாவில் பரவலாக தோசை கரண்டி வைத்து தடவி விடவும். இரண்டு நிமிடம் கழித்து செய்து வைத்த மசாலாவை அள்ளி தோசைக்கல் வைத்து நெய் சுற்றி விடவும். எண்ணை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
- 6
ஒரு பக்கம் சிவக்க வெந்தால் போதும். தோசை அடிப்பக்கம் சிவந்தவுடன் இரண்டாக மடித்துக் கொள்ளவும். இதற்கு தொட்டுக்கொள்ள தங்களுக்கு விருப்பமான சட்னியை வைத்துக் கொள்ளலாம். தோசை யிலேயே சட்னியும் மசாலா வைத்திருப்பதால் இதற்கென்று தனியாக சட்னி தேவை இல்லை. சுவையான கர்நாடகா மைசூர் மசாலா தோசை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
செட் தோசை (Set dosai recipe in tamil)
சூப்பர் சாஃப்ட் ஸ்பன்ஜி கர்நாடக ஸ்பெஷல் தோசை #karnataka Lakshmi Sridharan Ph D -
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka மிகவும் எளிதாக செய்ய கூடிய கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும்Durga
-
ஹோட்டல் மசால் தோசை (Masal dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தோசை மசால் தோசை. #hotel Sundari Mani -
மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)
#milletமக்காச்சோளம் தோசை மிகவும் சத்து நிறைந்தது. தோசை மிகவும் சுவையாக இருக்கும். எளிதாக செய்ய கூடியது. Linukavi Home -
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
செட் தோசை(set dosai recipe in tamil)
#birthday3சென்னை செட் தோசை சைதாப்பேட்டை வடகறி மிகவும் பிரபலமான ஒன்று. முதலில் செட் தோசை காண செய்முறையை கொடுத்துள்ளேன் அடுத்த செய்முறை சைதாப்பேட்டை வடகறி காண செய்முறை தந்துள்ளேன். Meena Ramesh -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
பருப்பு வகைகள் மற்றும் கம்பு ஆனியன் ஊத்தாப்பம் தோசை
#everyday3கம்பு மற்றும் எல்லா வகை பருப்புகளையும் கலந்து செய்த கம்பு அடை தோசை. கம்பு சேர்ப்பதால் வெயிலுக்கு நல்லது. எல்லா வகை பருப்புகளும் சேர்ப்பதால் புரதச்சத்து அதிகம் கிடைக்கும். கார மிதமாக சேர்த்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாராளமாக கொடுக்கலாம். Meena Ramesh -
இன்ஸ்டன்ட் நீர் தோசை (Instant neer dosai recipe in tamil)
#ilovecooking.அரிசி மாவில் கார்போஹைட் ரேட் உள்ளது மேலும் மேலும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு டிபன் Sangaraeswari Sangaran -
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
திப்ப ரொட்டி.(Dippa ரொட்டி) (Dippa rotti recipe in tamil)
#apஆந்திர மக்கள் செய்யும் காலை உணவாகும். இதை ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடுவார்கள். உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் டிபன் வகை ஆகும். இதன் சுவை கிட்டத்தட்ட நமது காஞ்சிபுரம் இட்லியை போன்று உள்ளது. இந்த மாவை உடனடியாக செய்து கொள்ளலாம். அல்லது இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து செய்து கொள்ளலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டியது இல்லை. Meena Ramesh -
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
-
மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)
#npd2பூரி மசால் செய்யும்போது மீதமான மசால் வைத்து செய்யும் தோசை Priyaramesh Kitchen -
கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. Meena Ramesh -
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன் Sundari Mani -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
MTR ready mix rava idli (Rava idli recipe in tamil)
#karnatakaகர்நாடகா என்றாலே MTR ரெஸ்டாரன்ட் ஸ்பெஷல். MTR ஹோட்டலில் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாகவும்,தரமானதாகவும் இருக்கும். மேலும் இவர்கள் மசாலா ஐட்டங்கள் சாம்பார் பொடி, ரெடிமிக்ஸ், இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். MTR ரவா மிக்ஸ் இட்லி சூப்பராக இருக்கும். அதை நான் வீட்டிலேயே ரெடிமிக்ஸ் ஆக தயார் செய்து அதில் இட்லி செய்து காட்டியுள்ளேன். அவர்கள் செய்வது preservatives சேர்ப்பதால் நீண்ட நாட்கள் தாங்கும். நம்முடையது 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து செய்து கொள்ளலாம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இன்ஸ்டன்ட் ரவா மிக்ஸ் இட்லி நான் செய்த ரவா இட்லி இருந்தது. Meena Ramesh -
-
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnatakaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா. Aparna Raja -
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani -
முட்டை தோசை
#lockdownகடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh
கமெண்ட் (6)