எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு டம்ளர் உலுந்து
  2. ஒரு கப் பாலாக் கீரை
  3. இரண்டு பச்சை மிளகாய்
  4. ஒரு ஸ்பூன் மிளகு
  5. உப்பு தேவையான அளவு
  6. ஒரு வெங்காயம்
  7. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து வைக்கவும். உளுந்தை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம்,பச்சை மிளகாய் கீரை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்தை போட்டு தண்ணீர் கொஞ்சம் தெலித்து வடை பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,கீரை,மிளகு, உப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கையில் மாவை கொஞ்சம் எடுத்து நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து பொரித்தெடுக்கவும்.

  4. 4

    இப்போது சுவையான கீரை மெதுவடை தயார்.சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes