தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே...

தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..

#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி
  2. 1கப் கட்டி தேங்காய்ப்பால்
  3. 1/4 கப் வறுத்த பாசிபருப்பு
  4. 1/2ஸ்பூன் மிளகு
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. 1ஸ்பூன் இஞ்சி துருவல்
  7. 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  8. 2ஸ்பூன் நெய், 2ஸ்பூன் எண்ணெய்
  9. 2ஸ்பூன் முந்திரி
  10. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    பாசிப்பருப்பை பச்சை மண ம் போக வறுத்துக்கவும். அரிசி, பாசிப்பருப்புடன் 1கப் தேங்காய்ப்பால் + 3கப் தண்ணீர், இஞ்சி, உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் சதத்துக்கு வேக விடடு இறக்கி வைத்துக்கவும்

  2. 2

    நன்கு வெந்த சாதத்தை நன்றாக மசித்துக்கவும்

  3. 3

    ஒரு கரண்டியில் 2ஸ்பூன் நெய், எண்ணெய் சேர்த்து மிளகு, சீரகம், முந்திரி சேர்த்து வறுத்ததும் ஸ்டவ்வை ஆப் செய்து அதன்பின் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தா ளிப்பை பொங்கலில் சேர்க்கவும்.

  4. 4

    சுவையான தேங்காய்ப்பொங்கலை சாம்பார், சான்டனியுடன் பரிமாறவும்... சுவையான ருசியில் தேங்காய்ப்பாலில் செய்த வித்தியாசமான பொங்கல் சுவைக்க தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes