ஆம்லேட் சான்விஜ் (Korean style egg sandwich)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
தென் கொரியாவின் சாலையோரக் கடைகளில் மிகவும் பிரபலமான இந்த முட்டை சாண்ட்விச்,நம் நாட்டு சுவைக்காக சில மாற்றங்களுடன் எளிமையாக நம் சமையலறையில் செய்யலாம்........

ஆம்லேட் சான்விஜ் (Korean style egg sandwich)

#GA4
தென் கொரியாவின் சாலையோரக் கடைகளில் மிகவும் பிரபலமான இந்த முட்டை சாண்ட்விச்,நம் நாட்டு சுவைக்காக சில மாற்றங்களுடன் எளிமையாக நம் சமையலறையில் செய்யலாம்........

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்களுக்கு
  1. 4ரொட்டி துண்டுகள்
  2. 1 காரட்
  3. 1 வெங்காயம்
  4. 2 முட்டை
  5. வெங்காய தாழ் சிறிது
  6. 1கப் கோஸ்
  7. 2 ஸ்பூன் வெண்ணெய்
  8. 1ஸ்பூன் சாட் மசாலா
  9. 1/2 ஸ்பூன் உப்பு
  10. 1/2 மிளகு தூள்
  11. 1/4 கப் தக்காளி சாஸ்.

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நீளமாக நறுக்கிய வெங்காயம், துருவிய காரட்,முட் கோஸ், வெங்காயத்தாள், போன்றவற்றுடன் முட்டையை சேர்த்துக் கொள்ளவும்..

  2. 2

    இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா சேர்க்கவும் பின்னர் நன்கு அடித்து கலந்து கொள்ளவும்...

  3. 3

    ஒரு இரும்பு தவாவில் வெண்ணெய் தடவி ரொட்டியை இரண்டு புறமும் பொன்னிறமாக சுடவும்.....

  4. 4

    இரண்டு புறமும் பொன்னிறமாக சுட்ட ரொட்டியை தனியே வைக்கவும்...

  5. 5

    அதே கடாயில் மீண்டும் வெண்ணை தடவி ரொட்டி-யின் அளவுக்கு, ஆம்லெட்டை சதுரமாக ஊற்றவும்..... இரண்டு புறமும் வேகவிடவும்....

  6. 6

    பரிமாறும் தட்டில் ரொட்டி துண்டுடை,வைத்து அதன்மீது ஆம்லேட்டை வைத்து மேலே தக்காளி சாஸை தடவி....

  7. 7

    சாஸ் தடவிய ஆம்லெட் மீது மற்றொரு ரொட்டித் துண்டை வைத்து அழுத்தமாக மூடவும்...

  8. 8

    இதனை இரண்டு துண்டுகளாக வெட்டி பின்னர் பரிமாறும் பொழுது தக்காளி சாஸ் மேலே தூவவும்...

  9. 9

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம். மாலை நேர தேனீருடன் பரிமாற இனிமையான உணவு....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes