மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. அரை கிலோமட்டன்
  2. 100 கிராம்வெங்காயம்
  3. தக்காளி ஒன்று
  4. இஞ்சி பூண்டு விழுது மூன்று ஸ்பூன்
  5. 5 ஸ்பூன்குழம்பு மிளகாய் தூள்
  6. தேங்காய் அரை மூடி
  7. பட்டை கிராம்பு சோம்பு கறிவேப்பிலை தாளிக்க

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

  3. 3

    வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை இதனுடன் சேர்த்து கிளற வேண்டும்

  4. 4

    இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக மட்டனுடன் வதக்க வேண்டும் குழம்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மட்டனுடன் வதக்க வேண்டும்

  5. 5

    கடைசியாக மட்டன் வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்றிலிருந்து ஐந்து விசில் வரை விட வேண்டும்

  6. 6

    அரை மூடி தேங்காயைத் துருவி அவற்றை மிக்ஸியில் அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்

  7. 7

    இப்போது குக்கரில் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மட்டன் குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes