வெஜ் பிரியாணி (Veg biryani recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

வெஜ் பிரியாணி (Veg biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பேருக்கு
  1. 2 கப்பாஸ்மதி அரிசி
  2. 1 கப்பச்சை பட்டாணி
  3. 2கேரட்
  4. 2 கப்காலி பிளார்
  5. 1 கப்பீன்ஸ்
  6. 2பெரிய வெங்காயம்
  7. 1/2 கப்தயிர்
  8. 1 ஸ்பூன்எலுமிச்சை சாறு
  9. 1/3 கப்புதினா
  10. 2-3பச்சை மிளகாய்
  11. 2-3பூண்டு
  12. 1 ஸ்பூன்சீரகம்
  13. 2 ஸ்பூன்பிரியாணி மசாலா
  14. 1 ஸ்பூன்எண்ணெய்
  15. 4 கப்தண்ணீர்
  16. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சுட வைத்து அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை தாளிக்க வேண்டும்.

  3. 3

    பின் அதில் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்க வேண்டும்.

  4. 4

    வதங்கியவுடன் அதில் காலி பிளார், கேரட், பீன்ஸ் சேர்த்து 6-8 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

  5. 5

    காய்கள் நன்கு வெந்தவுடன் அதில் தயிர், எலுமிச்சை சாறு, பச்சை பட்டாணி, ஊற வைத்த அரிசியை சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.

  6. 6

    பின் அதில் உப்பு மற்றும் பிரியாணி மசாலா சேர்க்க வேண்டும்.

  7. 7

    இதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

  8. 8

    இறுதியாக புதினா சேர்த்து அடுப்பை மீடியம்மில் வைத்து 18-20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

  9. 9

    இப்போது சுவையான வெஜ் பிரியாணி ரெடி!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes