சோள அல்வா

Prabha muthu
Prabha muthu @cook_597599

சோள அல்வா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. சிறியவெள்ளை சோளம் 150 கிராம்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. முந்திரி மற்றும் பாதாம் தேவையான அளவு
  4. நெய் கால் கப்
  5. பாதாம் பவுடர் 3 ஸ்பூன்
  6. பால் ஒன்றரை கப்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    சோளத்தை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்

  2. 2

    மூன்று மணி நேரம் கழித்து சோளம் நன்றாக ஊறி இருக்கும் இப்போது இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரியை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும் அதில் அப்படியே அடுத்து பாலை சேர்க்கவேண்டும் பால் நன்றாக கொதித்ததும் இப்போது அரைத்து வைத்திருக்கும் சோள மாவை அதில் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்

  4. 4

    மிதமான தீயில் சோளமாவை கிளற வேண்டும் இப்போது பாதாம் பவுடரை அதில் சேர்க்க வேண்டும் பாதாம் பவுடர் சேர்ப்பதால் நல்ல கலர் மற்றும் வாசனையைக் கொடுக்கும்

  5. 5

    சோள மாவு நன்றாக வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும் கை விடாமல் மிதமான தீயில் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

  6. 6

    இப்போது கடைசியாக தே கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அல்வா பதத்திற்கு நன்றாக வந்துவிடும்

  7. 7

    இப்போது நெய் தடவிய ஒரு தட்டில் இந்த அல்வாவை ஊற்றி நன்றாக ஆறியதும் துண்டுகள் போடலாம்

  8. 8

    இப்போது சோள மாவில் தயாரித்த சுவையான அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes