சாமை சேமியா கிச்சடி (Little millet)

#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்..
சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் சாமை சேமியாவை முழுகும் அளவு தண்ணி சேர்த்து 3 நிமிடம் ஊறவைத்துக்கவும்
- 2
ஒரு இட்லி பாத்திரதில் இட்லி தட்டு வைத்து ஊற வைத்த சாமை சேமியாவை பிழிந்து இட்லி தட்டில் வைத்து 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து, எடுத்து தட்டில் போட்டு உதிர்த்து ஆறவிடவும்.
- 3
ஒரு வாணலியயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 4
அத்துடன், தக்காளி இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, கூடவே மற்று காய்களையும் சேர்த்து, உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
- 5
வேகவைத்த காய்களுடன், ஆற வைத்து உதிர்த்த சேமியாவை சேர்த்து கிளறி, ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரி வறுத்து போட்டு, மல்லி இலை தூவி இறக்கி விடவும்
- 6
சுவையான உதிரியான சாமை சேமியா சாப்பிட தயார்.. சூடா தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்...
Similar Recipes
More Recipes














கமெண்ட் (4)