சீஸ் ரோல் (Cheese roll recipe in tamil)

Kanimozhi M
Kanimozhi M @poojasree
Coimbatore.

சீஸ் ரோல் (Cheese roll recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
4 பேர்
  1. 2உருளை கிழங்கு
  2. 2 ஸ்பூன். மைதா மாவு
  3. 1 ஸ்பூன் சோள மாவு
  4. 2 (அ) 3. சீஸ் ஸ்லைஸ்
  5. பெப்பர் தேவையான அளவு. கொத்தமல்லி இலை. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு. ப்ரெட் தூள் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    உருளைகிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து அதனுடன் மிளகு தூள், உப்பு, கொத்தமல்லி இலை (சிறிதாக அரிந்தது). மைதா மற்றும் சோள மாவு தண்ணீர் ஊற்றாமல் கலந்து கொள்ளவும்.

  2. 2

    சீஸ் உடன் பெப்பர், உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.

  3. 3

    சிறிது சோளமாவை தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். மசித்த உருளை கிழங்கு மசாலாவை உருட்டி தட்டையாக தட்டி அதனுள் சீஸை நடுவில் வைத்து அழுத்தாமல் மென்மையாக உருட்டவும்.

  4. 4

    பின் எல்லா உருண்டைகளையும் சோளமாவு (தண்ணீர் ஊற்றி கலந்தது) போட்டு எடுத்து பின் ப்ரெட் தூளில் போட்டு எடுத்து ஒரு மணி நேரம் ப்ரீசரில் வைக்கவும்.

  5. 5

    ஒருமணி நேரம் கழித்து அவற்றை மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  6. 6

    மிதமான சூட்டில் சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanimozhi M
Kanimozhi M @poojasree
அன்று
Coimbatore.

Similar Recipes