மடிப்பு சப்பாத்தி (Madippu chappathi recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# flour1

மடிப்பு சப்பாத்தி (Madippu chappathi recipe in tamil)

# flour1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 500 கி கோதுமை மாவு
  2. 3 டீஸ்பூன் எண்ணெய்
  3. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவை நாம் எப்போதும் சப்பாத்திக்கு பிசையும் பக்குவத்தில் உப்பு எண்ணெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து சற்று தளர்வாக பிசைந்து வைக்கவும். மூடி போட்டு 20 நிமிடம் ஊறவிடவும்.

  2. 2

    இப்போது சப்பாத்தி கட்டையில் உருண்டைகளை வைத்து திரட்டவும். பாதித் இருட்டியதும் அதன் மேல் கால் டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பரப்ப செய்யவும். அதை பின் முக்கோணமாக மடிக்கவும்.

  3. 3

    பிறகு அதை மிகவும் மெல்லியதாக திரட்டி இரண்டு கைகளினால் அதிகமான மாவை போகச் செய்யவும். சூடு செய்த தோசைக்கல்லில் சேர்க்கவும்.*பொதுவாக சப்பாத்திகளை 4 முறை திருப்பவேண்டும் அப்போது நன்றாக சாஃப்ட்டாக வரும். அதிகமான தீயில் வேகவைக்கவும். அரை நிமிடம் கழித்து திருப்பவும்.

  4. 4

    அதன் மேலே சில காற்று குமிழ்கள் வரும் அதுவரைக்கும் பொறுத்திருக்க. பிறகு அதை திருப்பி போடவும் நன்றாக உப்பலாக வரும்.

  5. 5

    சிறிது நிமிடம் வேகவிட்டு எண்ணெய் ஊற்றி திருப்பி எடுக்கவும்*முதலிலேயே எண்ணெய் சேர்த்தால் உப்பலாக வராது. இந்த சப்பாத்தி மெதுவாகவும் சாஃப்ட் ஆகவும் அசத்தலான சுவையில் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes