கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை
#GA4
#week8
Steamed

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2டம்ளர்புழுங்கலரிசி
  2. அரை மூடி துருவிய தேங்காய்
  3. உப்பு தேவையான அளவு
  4. 1 ஸ்பூன் கடுகு,
  5. 1 ஸ்பூன்உளுந்து பருப்பு,
  6. 5 வரமிளகாய்
  7. 1 ஸ்பூன்பெருங்காயம் கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    2டம்ளர் இட்லி அரிசியை 4மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்சியில் துருவிய தேங்காய் சேர்த்து சிறிது கொர, கொரப்பாக அரைக்கவும்.

  2. 2

    உப்பு தேவையான அளவு சேர்க்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிக்சியில் அரைத்ததை ஊற்றி நன்றாக கிளறவும். நன்றாக கொழுக்கொட்டை மாவு வேகும் வரை வதக்கவும்.

  3. 3

    பின்னர், சின்ன சின்ன கொழுக்கொட்டையாக பிடிக்கவும். ஒரு ஆவியில் வேக வைக்கும் ஸ்டிம்மரில் வேக வைக்கவும். 15நிமிடம் வேக வைக்கவும்.

  4. 4

    கொழுக்கொட்டை ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes