மூன் ஸ்வீட் பிஸ்கட் (Moon sweet biscuit recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

மூன் ஸ்வீட் பிஸ்கட் (Moon sweet biscuit recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் மைதா மாவு
  2. 1/3கப் சர்க்கரை
  3. 2 ஏலக்காய்
  4. 1/4ஸ்பூன் உப்பு
  5. 2டேபிள்ஸ்பூன் கருப்பு எள்
  6. 2டேபிள்ஸ்பூன் நெய்
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பவுலில் மைதா மாவு, சர்க்கரை பவுடர், உப்பு,எள் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு இதில் நெய் விட்டு கலந்து விட்டு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து 15 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு சப்பாத்தி கட்டையில் மீடியமான உருண்டை அளவு மாவு எடுத்து தேய்த்து கொள்ளவும்.ஒரு மூடி எடுத்து ஓரங்களில் இருந்து படத்தில் காட்டியபடி நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    தேவை இல்லாத மாவை மறுபடியும் தேய்த்து மூடி வைத்து கட் செய்து எடுத்து கொள்ளவும்.

  5. 5

    அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து நறுக்கிய பிஸ்கட்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சூப்பரான குழந்தைகளை மிகவும் கவரும் வகையில் மூன் வடிவத்தில் பிஸ்கட்கள் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes