நெய் அப்பம்

Tips Time
Tips Time @cook_27567914

நெய் அப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 120கி பச்சரிசி
  2. 50கி வெல்லம்
  3. 1/4கப் தண்ணீர்
  4. 2ஏலக்காய்
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    வெல்லத்தை கால் கப் தண்ணீர் கொண்டு கரைத்து வடிகட்டி ஆற வைக்க வேண்டும்.

  3. 3

    பின்பு ஊற வைத்த அரிசியை வடிகட்டி அதனுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    ஒரு வாழைப்பழத்தை இதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பின்பு காய்ச்சி வடிகட்டிய வெல்லத் தண்ணீரையும் கொண்டு அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    அரைத்த மாவை தோசை பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேர அளவு ஊறவைக்கவும்.

  7. 7

    பின் சூடான எண்ணெயில் மிதமான தீயில் மாவை குழிக்கரண்டி அளவு ஊற்றி சுட்டு எடுக்க வேண்டும்.

  8. 8

    இப்போது கார்த்திகை தீபத்திற்கு ஸ்பெஷல் நெய்யப்பம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Tips Time
Tips Time @cook_27567914
அன்று

Similar Recipes