அதிரசம்(athirasam recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

அதிரசம்(athirasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. 2கப் பச்சரிசி
  2. ஒன்றரை கப் வெல்லம்
  3. 2ஏலக்காய்
  4. 1/4ஸ்பூன் உப்பு
  5. 1ஸ்பூன் நெய்
  6. தேவையானஅளவு எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் அரிசிக்கு 3/4கப் வெல்லம் எடுக்கவும்.

    பச்சரிசியை நன்றாக கழுவி,1.30-2 மணி நேரம் ஊற விடவும்.ஊறிய அரிசியை ஒரு காட்டன் துணியில் பரப்பி,ஈரம் உலர்த்தவும்.

  2. 2

    தொட்டுப் பார்த்தால் கைகளில்,ஈரம் ஒட்டாமல் அரிசி ஒட்டும் அளவிற்கு காய்ந்ததும்,மிக்ஸி ஜாருக்கு மாற்றி,சிறிதளவு மட்டும் கொரகொரப்பாக இருக்குமாறு அரைக்கவும்.

  3. 3

    அரைக்கும் பொழுதே ஏலக்காய் மற்றும் உப்பு சேர்க்கவும்.மீடியம் ஓட்டை உள்ள சல்லடையில் அரைத்த மாவை ஜலித்து எடுக்கவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில்,வெல்லம் சேர்த்து 1/2கப் தண்ணீர் ஊற்றி கரைத்து,இன்னோரு பாத்திரத்தில் வடிகட்டவும்.

  5. 5

    இந்த கரைசலை ஒரு வாணலியில் இட்டு,பாகு பதம்,தண்ணீரில் விட்டால் உருட்ட வரும் அளவிற்கு கொதிக்க விடவும். உருட்டு பதம் கெட்டித் தன்மையாக இருக்க கூடாது.

  6. 6

    உடனே, அடுப்பை அணைத்து,மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது,மாவு கொஞ்சம் இளக்கமாகத் தான் இருக்கும். சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும்.

  7. 7

    மாவுக் கலவை ஆறியதும்,1ஸ்பூன் நெய் தடவி,ஈரப்பதம் உள்ள துணியால், சுற்றி கட்டி ஒரு தட்டு வைத்து மூடி 2 நாட்கள் கழித்து,சுடலாம்.

  8. 8

    2நாட்களுக்குப் பிறகு,மாவு நன்றாக புளித்திருக்கும். கெட்டியாகவும் இருக்கும்.

  9. 9

    இதிலிருந்து,கொஞ்சம் எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் தண்ணீர் தெளித்து உருண்டையை வைத்து,இன்னோரு பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி ஏதேனும்,ஒரு பொருள் கொண்டு அழுத்தினால், ஒரே மாதிரியான வட்டம் கிடைக்கும்.

  10. 10

    பின்,வாணலியில் அதிரசம் முழகும் அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும்,சிறு தீக்கும் கொஞ்சம் அதிகமான தீயில் வைத்து,ஒவொன்றாக பொரித்து,இன்னோரு கரண்டியால் அழுத்தி எண்ணெய் வடித்துவிடவும்.

  11. 11

    அவ்வளவுதான்.மிகவும் சுவையான,அதிரசம் ரெடி.

    1. 95%பொரித்தால் போதுமானது. இல்லையெனில் ஆறியதும், மொறு மொறுப்பாகிவிடும்.

    2.2 நாட்களுக்குப் பிறகும்,மாவுக்கலவை இளக்கமாக இருந்தால்,1 நாள் பிரிட்ஜ்-ல் வைத்து,மறுநாள் சுடவும்.

    3.முதல் அதிரசமே, கல் போல் வந்தால்,1ஸ்பூன் சுடு தண்ணீர் சேர்த்து மாவில் கலந்து விட்டு கலந்து,பின் சுடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

கமெண்ட் (8)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
"மலையை கெல்லி எலியை பிடித்த கதை" நான் செய்த அதிரசம் ஓட்டை போடவில்லை , நல் ல ருசி.

Similar Recipes