முளைக்கட்டிய பச்சைப்பயறு வெயிட் லாஸ் சாலட்

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#GA4

முளைக்கட்டிய பச்சைப்பயறு அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டின் சத்து நிறைந்தது.இதை வெயிட் லாஸ் செய்ய காலை மற்றும் ஸ்னாக்ஸ் உணவாக உட்கொள்ளலாம். சிறிது வதக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 நபர்
  1. முளைக்கட்டிய பச்சைப்பயறு-1 கப்
  2. சின்ன வெங்காயம்-3
  3. கடுகு கடலைப்பருப்பு-1 டீஸ்பூன்
  4. எண்ணெய்-1/2 டீஸ்பூன்
  5. தேவையானஅளவு உப்பு
  6. வரமிளகாய்-1

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பச்சை பயிரை தண்ணீரில் அலசிவிட்டு எட்டிலிருந்து பத்து மணி நேரம் ஊறவைத்து ஒரு காட்டன் துணியில் நன்றாக கட்டி முளைகட்டி வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு கடலைப்பருப்பு சேர்த்து பொரியவிடவும் பின்னர் 3 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும்.வரமிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    பாதி வெந்ததும் அதில் முளைக்கட்டிய பச்சைப்பயறு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இப்பொழுது சூடான சுவையான முளைக்கட்டிய பச்சைப்பயறு வெயிட் லாஸ். சாலட் தயார்.இப்படி சிறிது வதக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.. நன்றி.ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes