கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும்.

கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)

#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 50 கிராம்கொள்ளு
  2. 1தக்காளி
  3. மிளகு ஜீரகம் தேவையான அளவு
  4. 3காய்ந்த மிளகாய்
  5. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 250கிபுளி
  7. 3 கிபெருங்காயம்
  8. 5 பல் பூண்டு
  9. கடுகு தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. கொத்தமல்லி தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கொள்ளை வேகவைத்து தண்ணீரை எடுத்துக் கொள்ளவும் புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    தக்காளி மிளகு சீரகம் மஞ்சள் தூள் பெருங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    இதனுடன் வடித்த கொள்ளு தண்ணீர் புளிக்கரைசலை சேர்க்கவும்

  4. 4

    பூண்டை இடித்துக்கொள்ள வேண்டும்

  5. 5

    கொத்தமல்லியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

  6. 6

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து காய்ந்த மிளகாயை போட்டு கொள்ள வேண்டும்

  7. 7

    மிளகாய் சிவந்தவுடன் கலந்த கலவையை எடுத்து அதில் ஊற்றி நுரை வந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்க வேண்டும்

  8. 8

    இப்போது நமது சூடான சுவையான ஆரோக்கியமான கொள்ளு ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes