முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Worldeggchallenge
ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  1. 5 முட்டை
  2. 50 கிராம் பொட்டுக்கடலை
  3. 1பெரிய வெங்காயம்
  4. சிறிதளவு இஞ்சி
  5. 10சிறிய பல் பூண்டு
  6. 1தக்காளி
  7. சோம்பு ஒரு டீஸ்பூன்
  8. மிளகாய்த் தூள்
  9. மல்லித் தூள்
  10. சீரகத் தூள்
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, 5 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளற வேண்டும்.

  3. 3

    பின்பு அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை முட்டை கலவையில் கொட்டி நன்கு கிளற வேண்டும்.

  4. 4

    கலக்கிய முட்டை கலவையை இரும்பு தோசை கல்லில் எண்ணெய் விட்டு ஆம்லெட் போல் எடுக்க வேண்டும்.

  5. 5

    செய்து எடுத்த ஆம்லெட் குட்டி குட்டியாக கட் பண்ணிக் கொள்ள வேண்டும்.

  6. 6

    மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, வெட்டிய வெங்காயம், தக்காளி-1,சோம்பு, சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்

  7. 7

    பின்பு வதக்கிய கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக விழுதாக அரைக்க வேண்டும்.

  8. 8

    அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை தாளித்து, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கலந்து நன்றாக வதக்கவேண்டும் பின்பு அரைத்த கலவையை ஊற்ற வேண்டும்.

  9. 9

    குழம்பு பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வந்ததும் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை உள்ளே போட வேண்டும் ஒரு கொதி வந்தவுடன் மல்லித் தழை தூவி இறக்கி விட வேண்டும்.

  10. 10

    சத்தான சுவையான முட்டை ஆம்லேட் கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes