ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4
#Week13
#Mushroom

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும்.

ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)

#GA4
#Week13
#Mushroom

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. 200 கிராம்காளான்
  2. 100 கிராம்கோஸ்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 3 டேபிள்ஸ்பூன்கான்பிளவர் மாவு
  6. 2 டேபிள்ஸ்பூன்அரிசிமாவு
  7. 2 டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  8. 2 டேபிள்ஸ்பூன்தக்காளி சாஸ்
  9. ஒரு டேபிள்ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்தூள்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. விருப்பப்பட்டால் சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து கொள்ளலாம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    முதலாவது 200 கிராம் காளான் மற்றும் 100 கிராம் கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  3. 3

    நறுக்கிய காளான் உடன் சோள மாவு, அரிசி மாவு தேவையான அளவு உப்பு சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கலந்த காளான் கலவையை சிறுசிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.

  5. 5

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்

  6. 6

    வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதினை சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  7. 7

    கிரேவிக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கிரேவி பச்சை வாசனை போனவுடன் பொரித்து வைத்துள்ள காளான்களை சிறு சிறு துண்டுகளாக உள்ளே சேர்க்க வேண்டும்.

  8. 8

    எல்லாம் நன்றாக கிளறிவிட்டு மல்லித்தழை தூவி இறக்கினால் சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes