அரைத்து விட்ட துவரைக்கா சாம்பார் (Thuvaraikkai sambar recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2பரிமாறுவது
  1. 1/4கப் துவரம்பருப்பு
  2. 1கப் துவரைக்கா
  3. 15சின்ன வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1எலுமிச்சை அளவு புளி
  6. உப்பு
  7. வறுத்த அரைக்க:
  8. 2டீஸ்பூன் ஆயில்
  9. 1டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
  10. 4சின்ன வெங்காயம்
  11. 1டீஸ்பூன் தனியா
  12. 4வரமிளகாய்
  13. 1டீஸ்பூன் சீரகம்
  14. 1/2டீஸ்பூன் மிளகு
  15. 1/2டீஸ்பூன் அரிசி
  16. 2டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்
  17. தாளிக்க:
  18. 2டீஸ்பூன் ஆயில்
  19. 1/2டீஸ்பூன் கடுகு
  20. 1வரமிளகாய் கிள்ளியது
  21. சிறிதுகறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1 கப் துவரைக் காயை தோல் நீக்கி கழுவி குக்கரில் தண்ணீர் விட்டு 2 விசில் வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும்.

  2. 2

    1/4 கப் துவரம்பருப்பை வேக வைத்து எடுத்து வைக்கவும்.15 சின்ன வெங்காயம் தோல்நீக்கி கழுவி எடுத்து வைக்கவும்.

  3. 3

    1 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற விடவும் கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய் கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும். 1 டீஸ்பூன் கடலை பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், 4 வர மிளகாய், 1 டேபிள்ஸ்பூன் தனியா, 1 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் மிளகு, சிறிது அரிசி, 4 சின்ன வெங்காயம் எடுத்து வைக்கவும்.

  4. 4

    கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, கடலை பருப்பு, தனியா, சீரகம், மிளகு அரிசி, தேங்காய் துருவல் சின்ன வெங்காயம், வரமிளகாய், அனைத்தும் சேர்த்து நன்கு வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து விடவும்.

  5. 5

    வதக்கிய வெங்காயம் தக்காளியை வெந்த துவரம்பருப்பில் சேர்க்கவும். வேகவைத்த துவரைக் காயையும் சேர்க்கவும். அரைத்து வைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

  6. 6

    இவை அனைத்தையும் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேகவிடவும். ஊற வைத்த புளியை கரைத்து 1/2கப் அளவு லைட்டாக சேர்த்து கொதிக்கவிடவும்.

  7. 7

    நறுக்கிய கொத்தமல்லி தழையை மேலே தூவி பரிமாறவும். சுவையான அரைத்து விட்ட துவரைக்கா சாம்பார் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes