கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. கேக் செய்ய
  2. 1 கப் கோதுமை மாவு
  3. 3/4 கப் ஆரஞ்ச் பழச்சாறு
  4. 4 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  5. 3/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 1 டீஸ்பூன் துருவிய ஆரஞ்சு தோல்
  8. 3/4 கப் பொடித்த சர்க்கரை
  9. சாக்லேட் கிரீம் செய்ய
  10. 1/2 கப் பால்
  11. 1/2 கப் சர்க்கரை
  12. 1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  13. 1 டேபிள் ஸ்பூன் சாக்கோ பவுடர்
  14. 100 கிராம் வெண்ணெய்
  15. அலங்கரிக்க
  16. சிறிதுபொடித்த பாதாம்,முந்திரி, பிஸ்தா
  17. வெட்டிய ஆரஞ்சு பழத் துண்டு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    அகலமான பாத்திரத்தில் பால் பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,பொடித்த சர்க்கரை மற்றும் கோதுமை மாவை சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இத்துடன் ஆரஞ்ச் பழச்சாறு, எண்ணெய், துருவிய ஆரஞ்சு தோல் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்

  3. 3

    கேக் டின்னின் மேல் எண்ணெய் தேய்த்து பட்டர் சீட்டை மேல் வைக்கவும் பிறகு கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டவும்

  4. 4

    அவனில் 180 டிகிரி செல்சியஸ் ப்ரீ ஹீட் செய்து 25 நிமிடம் வைக்கவும்... பிறகு இதனை நன்றாக ஆறவிடவும் ஆறிய பிறகு நடுவில் வெட்டி இரண்டாக பிரித்து வைக்கவும்

  5. 5

    சாக்லேட் கிரீம் தயாரிக்க முதலில் கடாயில் சர்க்கரை, பால்,மைதா மாவு, சாக்கோ பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்

  6. 6

    பிறகு அடுப்பில் வைத்து குறைந்த தீயில் 2 முதல் 3 நிமிடம் கிளறவும் கெட்டியானவுடன் அணைத்து ஆறவிடவும்

  7. 7

    ஒரு பவுலில் மிருதுவான வெண்ணெய் சேர்த்து ஸ்பூன் உதவியால் கிளறவும்

  8. 8

    இதைப் போல் பத்து நிமிடம் கிளறவும் போது வெண்ணெய் க்ரீம் போல் வர ஆரம்பிக்கும் அதுவரை கிளறவும்

  9. 9

    இப்போது தயாரித்து வைத்திருக்கும் சாக்கோ கலவையை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்

  10. 10

    இப்போது சாக்கோ க்ரீம் தயார்.. குறிப்பு: ஒவ்வொரு முறையும் சாக்கோ கலவையை ஊற்றும்போது 2 நிமிடம் நன்றாக கலக்கி நன்றாக கரைந்து பிறகு மீண்டும் ஊற்றவும் ஒரேடியாக ஊற்றினாள் திரிந்தது போல் ஆகிவிடும்

  11. 11

    தட்டின் மேல் முதலில் தயார் வெட்டி வைத்துள்ள ஒரு கோதுமை ஆரஞ்சு கேக்கை வைக்கவும் அதன் மேல் ஆரஞ்ச் பழச்சாறு சிறிது ஊற்றவும் பிறகு இதன் மேல் தயாரித்து வைத்திருக்கும் கலவையை எல்லா இடங்களிலும் பரவுமாறு தேய்க்கவும் பிறகு அதன் மேல் மற்றொரு வெட்டி வைத்துள்ள கோதுமை ஆரஞ்ச் கேக்கை வைக்கவும்

  12. 12

    மீதமிருக்கும் சாக்லேட் கீரிமை கேக்கின் எல்லா இடங்களிலும் பரவுமாறு தேய்க்கவும் இறுதியாக இதன்மேல் பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தாவை வெட்டி வைத்துள்ள ஆரஞ்ச் பழம், செர்ரி பழம் சேர்த்து பரிமாறவும்

  13. 13

    சுவையான அட்டகாசமான கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes