எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. இரண்டுகிவி பழம்
  2. பத்து கிராம்அகர் அகர்
  3. அரை கப்சர்க்கரை
  4. அரை கப்பால்
  5. ஒரு துளிபச்சை ஃபுட் கலர்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    அகர் அகரை அரை கப் தண்ணீரில் பத்து நிமிடம் ஊற விடவும்.

  2. 2

    கிவியை தோல் சீவி வட்டமாக ஸ்லைஸ் பண்ணிக் கொள்ளவும்.

  3. 3

    ஊறிய அகர் அகரில் பாதியை எடுத்து அரை கப் தண்ணீரில் சேர்த்து கொதித்து கரைந்ததும் கால் கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

  4. 4

    அதில் பச்சை ஃபுட் கலர் சேர்த்து வெனிலா எசன்ஸ் கலந்து தனியே வைக்கவும்.

  5. 5

    ஒரு கிண்ணத்தில் வெட்டிய கிவியை வரிசையாக அடுக்கி அதன் மேல் பச்சை வண்ண அகர் கலவையை சேர்த்து செட்டாக விடவும்.

  6. 6

    மீதியுள்ள பழத்துடன் அரை கப் பால் மீதி சர்க்கரை சேர்த்து அரைத்து தனியே வைக்கவும்.

  7. 7

    மீதியுள்ள அகர் அகரை அரை கப் தண்ணீர் சேர்த்து கொதித்து கரைந்ததும் அரைத்த கலவை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  8. 8

    ஏற்கனவே செட்டாகிய பச்சை வண்ண அகர் அகர் கிண்ணத்தில் கிவி மற்றும் அகர் அகர் பால் கலவையை ஊற்றி ஆறி செட்டானதும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

  9. 9

    நன்கு சில்லானதும் ஒரு பிளேட்டில் கவிழ்த்து கிவி டபுள் டெக்கரை பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes