கோதுமை  கேக் (Wheat Cake recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#Grand1

இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.

இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 கப் பால் பவுடர்
  3. 1/2 கப் வெல்லம்
  4. 1/2 கப்பால்
  5. 12 முந்திரி
  6. 6 பாதாம்
  7. 10 டேட்ஸ்
  8. 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  9. 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  10. 1 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  11. உப்பு ஒரு சிட்டிகை
  12. 1/4 கப் எண்ணெய்
  13. 1/4 டேபிள் ஸ்பூன் பட்டை தோல்(விருப்பபட்டால்)

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிய ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து ப்ரீ ஹிட் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான பால் ஊற்றி முந்திரி,பாதாம்,டேட்ஸ் மற்றும் வெல்லம் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைத்து மிக்ஸியில் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் மேல் சல்லடை வைத்து கோதுமை மாவு பால் பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா மற்றும் பட்டை பொடி சேர்த்து நன்கு சலித்து அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும்.

  3. 3

    அதனுடன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். கேக் செய்யும் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுற்றிலும் தடவிக்கொண்டு கலந்துள்ள கலவையை ஊற்றி கொள்ளவும்.

  4. 4

    இதன் மேல் முந்திரி மற்றும் பாதாம் வைத்து அலங்கரித்துக்கொண்டு கடாயில் உள்ளே வைத்து 50 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வேக விடவும்.

  5. 5

    ஐம்பது நிமிடங்கள் கழித்து பல் குத்தும் குச்சியை வைத்துக் வெந்ததை சரி பார்த்து அடுப்பை அணைத்து நன்கு ஆற விட்டு பிறகு தட்டிற்கு மாற்றினால் சுவையான மற்றும் சத்தான கோதுமை கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes