பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு (Paasiparuppu peerkankaai koottu recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு (Paasiparuppu peerkankaai koottu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. (2பெரியது)பீர்க்கங்காய்
  2. 100கிபாசிப்பருப்பு
  3. பெரிய வெங்காயம்-1
  4. ப.மிளகாய்-2
  5. 1\2ஸ்பூன்மஞ்சள் தூள்
  6. 1\2ஸ்பூன்சீரகம்
  7. தேங்காய்-1துண்டு
  8. எண்ணெய்-தேவையான அளவு
  9. உப்பு-தேவையான அளவு
  10. 1\2ஸ்பூன்கடுகு, சீரகம்-தலா
  11. கறிவேப்பிலை-1கொத்து

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பீர்க்கங்காயை தோல் சீவி கழுவி பொடியாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பாசிப் பருப்பை கழுவி அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து அதனுடன் பீர்க்கங்காய் சேர்த்து 2 விசில் விடவும்

  3. 3

    பிறகு குக்கரை திறந்து வெந்த பருப்பு, காயுடன் பொடிதாக அரிந்த வெங்காயத்தையும் அதில் சேர்த்து பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறி சேர்க்கவும்

  4. 4

    தேங்காய் துண்டு டன் சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து விழுதாக எடுக்கவும். இந்த விழுதினை காயுடன் சேர்க்கவும்

  5. 5

    பிறகு கூட்டுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி விட்டு ஒரு கொதி விடவும். கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்

  6. 6

    இப்போது கூட்டு சற்று வற்றி (semi solid) வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

  7. 7

    மற்றொரு சிறு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கிளறவும்

  8. 8

    சத்தான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes