மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#jan1
#week1
ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் பச்சரிசி
  2. 100 கிராம் இட்லி (புழுங்கல்) அரிசி
  3. 50 கிராம் கடலைப்பருப்பு
  4. 25 கிராம் துவரம்பருப்பு
  5. 25 கிராம்பாசிப்பருப்பு
  6. 2 ஸ்பூன் வெள்ளை உளுந்து
  7. 50 கிராம் பாசிப்பயறு
  8. 8 காய்ந்த மிளகாய்
  9. 2 ஸ்பூன் சோம்பு
  10. 1 ஸ்பூன் சீரகம்
  11. 10 பல் பூண்டு
  12. தாளிக்க வேண்டிய சாமான்கள்
  13. 1 ஸ்பூன் கடுகு
  14. 1 ஸ்பூன் உளுந்து
  15. 1 ஸ்பூன் சீரகம்
  16. 1 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  17. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  18. 2பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  19. 1/2 மூடி தேங்காய் துருவல் ஆக
  20. தேவையானஅளவு உப்பு
  21. தேவையானஅளவு தண்ணீர்
  22. இரண்டு கொத்து கருவேப்பிலை
  23. இரண்டு கொத்து கொத்தமல்லி இலை
  24. 1கைப்பிடி முருங்கை கீரை இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சரிசி இட்லி அரிசி துவரம்பருப்பு கடலைப்பருப்பு உளுந்து பாசிப்பருப்பு பாசிப்பயறு இரண்டு மூன்று முறை கழுவி ஒன்றாக இரண்டு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்

  2. 2

    ஊறவைத்த அரிசி பருப்பை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு அதனுடன் சோம்பு ஒரு ஸ்பூன் சீரகம் காய்ந்த மிளகாய் 10 பல் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்

  3. 3

    அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பெருங்காயத்தூள் சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கருவேப்பிலையை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு ஒரு நிமிடம் வதக்கி அரைத்த மாவு கலவையில் கொட்டவும்

  4. 4

    முருங்கைக் கீரை இலை கொத்தமல்லி இலை தேங்காய் பூவை சேர்த்து கோதுமை மாவு தோசை பதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும்

  5. 5

    அடுப்பில் தவாவை வைத்து தவா சூடானதும் மாவை சுற்றிலும் ஊற்றி பிறகு நடைபெறும் ஊற்றி கரண்டியால் நன்றாக இழுவ விடவும்

  6. 6

    சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் நடுவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் நன்கு வேகவைத்து முருக எடுக்கவும் அட தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes