துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#jan1 இது கடலைப்பருப்பு வைத்து செய்வாங்க... நான் துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன்...

துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)

#jan1 இது கடலைப்பருப்பு வைத்து செய்வாங்க... நான் துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
3பேர்கள்
  1. 1/2கப் துவரம் பருப்பு
  2. 1காய்ந்த மிளகாய்
  3. 10பல் பூண்டு
  4. 1சிறிய துண்டு இஞ்சி
  5. 1பெரிய வெங்காயம்
  6. 1/2கப் சாம்பார் வெங்காயம்
  7. 2தக்காளி
  8. 1ஸ்பூன்கடுகு
  9. 1/2ஸ்பூன் வெந்தயம்
  10. 1ஸ்பூன் சீரகம்
  11. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. 1சிறிய நெல்லிக்காய் அளவு புளி
  13. 3ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  14. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. தேவையானஅளவு உப்பு
  16. சிறிதளவுகொத்தமல்லி
  17. சிறிதளவுகறிவேப்பிலை
  18. பொரிப்பதற்கு எண்ணெய்
  19. 1/4கப் துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    முதலில் பருப்பை 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும்... ஊறிய பிறகு தண்ணீரை நன்றாக வடித்து மிக்ஸியில் பருப்பு, மிளகாய், இஞ்சி, சிறிது பூண்டு, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்..

  2. 2

    அரைத்த விழுதோடு வெங்காயம், மல்லி கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்..

  3. 3

    எண்ணெய் சூடாக்கி பக்கோடாவாக பொரித்து எடுக்கவும்..

  4. 4

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்..

  5. 5

    அத்துடன் சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.. வதங்கியதும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்..

  6. 6

    தக்காளி சேர்த்து வதங்கியதும் புளி கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்..

  7. 7

    கொதித்தவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்..

  8. 8

    மிக்ஸியில் தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த விழுதை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும்..

  9. 9

    நன்றாக கொதித்ததும் இறுதியாக மல்லி இலை தூவி இறக்கவும்

  10. 10

    பரிமாறுவதற்கு 10நிமிடங்கள் முன் பக்கோடாவை குழம்பில் சேர்க்கவும்... முதலில் சேர்த்தால் பக்கோடா குழம்பை உறிஞ்சி விடும்....

  11. 11

    இப்போது சுவையான துவரம் பருப்பு பக்கோடா குழம்பு தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes