பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)

பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கடலை பருப்புடன்,3 வரமிளகாய்,1/2ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து 3மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊற வைத்த பருப்பை தண்ணீர் வடிகட்டி,மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து கொரொரப்பாக அரைக்கவும்.
- 3
அரைத்தவற்றை சிறு உருண்டைகளாக பிடித்து,இட்லி குக்கரில் 15நிமிடங்கள் வேக வைத்து எடுத்து ஆற வைக்கவும்.
- 4
பூண்டை தட்டிக் கொள்ளவும்.
புளி கரைத்துக் கொள்ளவும்.
தேங்காயுடன்,சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு உளுந்து,வெந்தயம் மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து,வெங்காயம், இடித்த பூண்டு மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
வதங்கியதும், குழம்பு மிளகாய் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கருகி விடாமல் கலந்து விடவும்.
- 7
பின் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கொதித்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
கொதித்ததும்,தேங்காய் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும்,பருப்பு உருண்டைகள் சேர்த்து கொதிக்க விடவும். உருண்டையிலும் உப்பு சேர்த்து உள்ளதால்,சுவைத்து பார்த்து, தேவைக்கு சேர்க்கவும்.
- 9
குழம்பு நன்கு கொதித்து, உருண்டைகள் குழம்பை இழுத்துக் கொண்டு கெட்டி ஆனதும்,சிறிது வெல்லம் சேர்த்து ஒரு கொதி விட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
- 10
அவ்வளவுதான். சுவையான உருண்டை குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
50 கடலைப்பருப்பு,50துவரம்பருப்பு ,ஒரு ஸ்பூன் பச்சரிசி,ஊறப்போட்டு வ.மிளகாய் சோம்பு, சீரகம் 1ஸ்பூன், உப்பு போட்டு அரைத்து வெங்காயம் கறிவேப்பிலை,தேங்காய் ,சீரகம், வரமிளகாய், மபூண்டு அரைத்தவிழுதைப் போட்டு உருண்டை ப் பிடிக்கவும். பெரியநெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு தண்ணீர் ஊற்றிஷகரைத்துக்கொள்ளவும்.கடாயில் வெந்தயம் சோம்பு, சீரகம், கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உருண்டை களைப்போடவும்.வெந்ததும் தேங்காய் விழுது இதில்மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
-
-
அரைக்கீரை மசியல் & கீரைக் குழம்பு for kids(araikeerai masiyal recipe in tamil)
Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
More Recipes
கமெண்ட் (8)