பூரி கிழங்கு (Poori kilanku recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

என் அக்காவின் கைவண்ணத்தில் பூரிக்கிழங்கு விட்டமின் சி மற்றும் மாவுச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கு
#myownrecipe

பூரி கிழங்கு (Poori kilanku recipe in tamil)

என் அக்காவின் கைவண்ணத்தில் பூரிக்கிழங்கு விட்டமின் சி மற்றும் மாவுச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கு
#myownrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/2 கிஉருளைகிழங்கு
  2. 3 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுது
  6. 1 மஞ்சள் தூள்
  7. தேவைக்கேற்ப தண்ணீர்,எண்ணெய்,உப்பு
  8. 4 ஸ்பூன் கடலைப்பருப்பு
  9. 2 ஸ்பூன் கடலைமாவு
  10. கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை
  11. 1 ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம்,தக்காளி அறுத்துக் கொள்ளவும் உருளைக்கிழங்கை உப்புச் சேர்த்து அவித்து எடுத்துக் கொள்ளவும் பின் தோலுறித்து ஒன்றிரன்டாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும் பின் கடலைப்பருப்பை வறுக்கவும் கருகி விடக்கூடாது பச்சை மிளகாயைத் தாளிக்கவும்

  3. 3

    பின் வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுதுச் சேர்த்து வதக்கியப்பின் உப்புச் சேர்க்கவும்

  4. 4

    நன்றாக வதக்கியப்பின் மஞ்சள்த்தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பச்சைவாசனைப் போனதும் கிழங்குகளைச் சேர்த்துக் கொள்ளவும் பின் மூடி வைத்து வேகவிடவும்

  6. 6

    சிறிது வெந்தப்பதத்திற்கு வந்தவுடன் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் ஒரு கொதி வரும்வரை பொருத்திருக்கவும்

  7. 7

    கொதித்ததும் கடலைமாவை நன்றாக கரைத்துக் கொண்டதை ஊற்றிக் கொள்ளவும் கொதித்ததும் இறக்கவும் தண்ணீர் பதம் மாறி கொட்டியாகவே ஊற்றப்படுகிறது எனவே விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளவும்

  8. 8

    கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும் பின் பரிமாறவும் புதிய சுவையில் இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes