ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது.

ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21

ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. ராஜ்மா 200 கிராம்
  2. பொட்டு கடலை 50 கிராம்
  3. இஞ்சி சிறிய துண்டு
  4. மூன்று பூண்டு 3 பல்
  5. பச்சை மிளகாய் 3
  6. பட்டை சிறிய துண்டு கிராம்பு 2
  7. மல்லி விதை அரை டீஸ்பூன்
  8. சோம்பு அரை டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் சிறிதளவு
  10. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  11. சீரகத்தூள் கால் டீஸ்பூன்
  12. கொத்தமல்லி தலை தேவையான அளவு
  13. முந்திரி 10
  14. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    ராஜ்மாவை நன்கு கழுவி தண்ணீரில் 10 10 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த ராஜ்மாவை 6 விசில் விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    எடுத்து வைத்துள்ள பொட்டுக்கடலை,தனியா, முந்திரிப் பருப்பு, சோம்பு இஞ்சி பூண்டு கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் பட்டை கிராம்பு அனைத்து பொருட்களையும் மிக்சியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ராஜ் மாவையும் மை யாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    அரைத்து வைத்த ராஜ்மா அரைத்த மசாலா பொருட்கள் அதனுடன் மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் சீரகத்தூள் உப்பு தேவைப்பட்டால் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து ஒரு சேர நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி வடை போல தட்டி நான்-ஸ்டிக் தவாவில் மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக இரண்டுபக்கமும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

  5. 5
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes