மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#nv
செம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன்‌. நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள்.

மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)

#nv
செம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன்‌. நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 500 கிராம் சிக்கன்
  2. 1 தேக்கரண்டி வெண்ணெய்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1 கப் தயிர்
  7. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  8. 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  9. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  10. 1 தேக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்
  11. 10 முந்திரி
  12. 200 மில்லி பிரஷ் கிரீம்
  13. 1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி
  14. நறுக்கின கொத்தமல்லி இலைகள்
  15. 1/4 கப் தண்ணீர்
  16. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அடுப்பில் பாத்திரம் வைத்து பட்டர் சேர்த்து சூடானதும்,நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதன் பின் கழுவி வடித்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    கூடவே சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். சிக்கன் நிறம் மாறி வெள்ளை நிறமாகும் வரை வதக்கவும். அதன் பின் தயிர் சேர்த்து கலந்து விடவும். மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

  3. 3

    பிறகு சீரகத் தூள், மிளகு தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும். கலந்தபின் கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மேலும் 10 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடவும்.

  4. 4

    அதன்பிறகு முந்திரியை அரை மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற வைத்து அரைத்து விழுதாக சிக்கனில் சேர்க்கவும். கூடவே ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    வறுத்த கசூரி மேத்தி உள்ளங்கையில் வைத்து நசுக்கி சிக்கனில் சேர்க்கவும்.இதனை கலந்து விட்டு நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

  6. 6

    மிகவும் சுவையான கிரீமியா ன மலாய் சிக்கன் தயார்.இதனை நான், சப்பாத்தி, புலாவ் வகைகள் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes