ஹோட்டல் முறையில் பச்சை மொச்சை குருமா (Pachai mochai kuruma recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/4 கி பச்சை மொச்சை
  2. 2 வெங்காயம், தக்காளி
  3. 1 பச்சைமிளகாய்
  4. 2பட்டை, 3 கிராம்பு
  5. 1 ஸ்பூன் சோம்பு, கசகசா
  6. 2 ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுது
  7. 1 ஸ்பூன் மஞ்சள்,கரம் மசாலா,மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள்
  8. 2தேங்காய்ச் சில்
  9. தேவைக்கேற்ப செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தண்ணீர், உப்பு
  10. கைப்பிடி அளவு மல்லி இலை,கருவேப்பிள்ளை

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    மொச்சைக்காயை உறித்து தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும்

  2. 2

    இஞ்சி மற்றும் பூண்டை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மொச்சை வாயுப் பொருள் என்பதால்

  3. 3

    மிக்ஸி ஜாரில் தேங்காய்ச்சில், கசகசா,பட்டைச் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு அதில் சோம்பு, வெங்காயம்ச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,சோம்பு,வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் ஒருப்பச்சை மிளகாய்,உப்புச் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  7. 7

    பிறகு மஞ்சள்,மல்லி,கரம்,மிளகாய்த்தூள்கள் எல்லாம் அளவாகச் சேர்த்துக் கொள்ளவும் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தும் நன்றாக வதங்க வேண்டும்

  8. 8

    பின் மொச்சைபயிரைச் சேர்த்து வதக்கவும் பிறகு அளவாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்

  9. 9

    தண்ணீரை கலந்து விட்டு மூடி வைத்துக் கொள்ளவும் நன்றாக கொதிக்க விடவும்

  10. 10

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும் பயிரு வெந்துவிடும் பின் அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்க்கவும்

  11. 11

    அனைத்தும் ஒருக் கொதி வந்ததும் கருவேப்பிள்ளை, மல்லித்தழைஇலைகளைத் தூவவும்

  12. 12

    மனம் நன்றாக இருந்தது பின் பரிமாறவும் சுவையான பச்சை மொச்சை குருமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes