செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 2டேபிள்ஸ்பூன் மல்லி
  3. 2டீஸ்பூன் சீரகம்
  4. 1டீஸ்பூன் சோம்பு
  5. 1டீஸ்பூன் மிளகு
  6. 4 காய்ந்தமிளகாய்
  7. 1துண்டு பட்டை
  8. 1 அன்னாசிப்பூ
  9. 4 கிராம்பு
  10. 2 ஏலக்காய்
  11. 2பெரிய வெங்காயம்
  12. 1 தக்காளி
  13. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  14. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  15. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  16. 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் அரைத்தது
  17. தேவையானஅளவு உப்பு
  18. சிறிதளவு கருவேப்பிலை கொத்தமல்லி
  19. 2 டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் மல்லி, சீரகம், சோம்பு,மிளகு,காய்ந்த மிளகாய்,பட்டை, அன்னாசிப்பூ,கிராம்பு, ஏலக்காய், சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்,....

  2. 2

    வறுத்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து, பவுடராக அரைத்துக் கொள்ளவும்,....

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,பிரிஞ்சி இலை, வெங்காயம்,கருவேப்பிலை,இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்,.... வதங்கியவுடன் தக்காளி, மிளகாய்த்தூள்,வறுத்து அரைத்த மசாலா, தேவையான உப்பு,கழுவிய சிக்கன் துண்டுகள், சேர்த்து வதக்கவும்,....

  4. 4

    சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மூடி சிக்கனை பத்து நிமிடம் வேக விடவும்,.... சிக்கன் வெந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்,....

  5. 5

    கிரேவி பதத்திற்கு வந்தவுடன்,கொத்தமல்லி தூவி இறக்கவும்,.... செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார்,.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes