மேகி நூடுல்ஸ்  வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 நபர்
  1. 200கி மேகி
  2. சாஸ் தயார் செய்ய
  3. 1மே.க சோள மாவு
  4. 1/2மே.க மிளகாய் தூள்
  5. 1/4மே.க மல்லி தூள்
  6. 1தே.க சீராக தூள்
  7. 1தே.க மிளகு தூள்
  8. 1/2மே.க சர்க்கரை
  9. 2மே.க சோயா சாஸ்
  10. 1மே.க வினிகர்
  11. 3மே.க எண்ணெய்
  12. மேகி தயார் செய்ய
  13. 4 பூண்டு
  14. 1துண்டு இஞ்சி
  15. 2வெங்காயம்
  16. குடைமிளகாய்
  17. 1கேரட்
  18. சிறிதுமுட்டை கோஸ்
  19. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தண்ணீருடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதி வந்ததும் 2 மேகி நூடுல்ஸ் சேர்த்து முக்கால் பாகம் அளவிற்கு வேக விடவும்

  2. 2

    வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரை ஊற்றிக்கொள்ளவும்

  3. 3

    சோள மாவு, மிளகாய் தூள், மல்லி தூள், சீராக தூள், மிளகு தூள், சோயா சாஸ்,வினிகர், எண்ணெய்,சர்க்கரை,உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி சேர்த்து லேசாக வதக்கி பின் வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்

  5. 5

    பின் தயார் செய்த சாஸ் ஊற்றி கலந்து கொண்டு பின் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து லேசாக வதக்கவும்.
    (காய்கறிகள் அதிகம் வேக கூடாது)

  6. 6

    இறுதியில் வேக வைத்த மேகி நூடுல்ஸை சேர்த்து கலந்து பரிமாறவும்.சௌமியன் நூடுல்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes