நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கிலோ நாட்டுக் கோழி
  2. 100 கிராம் சின்ன வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 15 பல் பூண்டு
  5. ஒரு துண்டு இஞ்சி
  6. கருவேப்பிலை சிறிது
  7. மல்லி இலை சிறிது
  8. 1 கப் தேங்காய் துருவல்
  9. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1 ½ ஸ்பூன் மல்லி தூள்
  11. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1 ஸ்பூன் சோம்பு
  13. 1 ஸ்பூன் மிளகு
  14. 1 ஸ்பூன் சீரகம்
  15. பட்டை சிறிய துண்டு
  16. 3 ஏலக்காய்
  17. 2 கிராம்பு
  18. 1 ஸ்பூன் கசகசா
  19. 4 ஸ்பூன் நல்லெண்ணெய்
  20. 10 முந்திரி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம்,இஞ்சி, பூண்டு, தக்காளி,கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    வதக்கி அதை நன்கு ஆற வைக்கவும், பின்னர் விழுதாக அரைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் பட்டை,கிராம்பு, ஏலக்காய்,சீரகம்,சோம்பு போன்றவற்றை நன்கு வதக்கி பின் அதனுடன் கசகசா,தேங்காய், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    குக்கரில் நல்லெண்ணை சேர்த்து அதில் சோம்பு சீரகம் கருவேப்பிலை சேர்த்து பொரியவிடவும்

  5. 5

    பொரிந்ததும் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கி

  6. 6

    சிக்கனுடன் மல்லித்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நாட்டுக்கோழியை வேகவிடவும்

  7. 7

    பின்னர் அரைத்த வெங்காயம் தக்காளி மசாலாவை சேர்த்து,உப்பு உடன் நன்கு கொதி வரும் வரை வேக விடவும்

  8. 8

    இவை நன்கு கொதித்த பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து,மல்லி இலை தூவி, கலந்து மூடி 3 முதல் 5 விசில் வரை விடவும் (கோழியின் தன்மைக்கு ஏற்ப)

  9. 9

    பின்னர் பத்து நிமிடம் ஆற விட்டு திறந்தால் சுவையான நாட்டுக்கோழி குருமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes