எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு ஆழாக்கு கடலை மாவு
  2. 3 ஸ்பூன் இடியாப்ப அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு
  3. பொரிப்பதற்கு தேவையான ஆயில்
  4. வெல்லம் பொடித்தது முக்கால் ஆழாக்கு சர்க்கரை 2 ஸ்பூன்
  5. ஏலக்காய்த் தூள் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    கடலை மாவு அரிசி மாவு ஒரு சிட்டிகை உப்பு,ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து சூடான எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து, சுடவைத்து ஆற வைத்த தண்ணீர் விட்டு மென்மையாக பிசைந்து வைக்கவும். வெல்லத்தைப் பொடித்து வைக்கவும். ஒரு வாணலில் ஆயில் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு காய்ந்ததும் பிசைந்த மாவை,தேன்குழல் அச்சில் சேர்த்து,நன்கு முறுக்கு போல் சுட்டு எடுக்கவும். சுட்ட முறுக்கை தூள்செய்து ஆறவைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம், 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு குழைய அதிரசத்திற்கு செய்வதுபோல் பாகு செய்யவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும்.வெல்லப்பாகில் தூளாக்கிய முறுக்கு சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும். ஆறவைக்கவும்.

  3. 3

    சுவையான வாயில் போட்டால் கரையும் திருநெல்வேலி இனிப்பு,மனோகரம் தயார்.நீங்களும் செய்து பாருங்கள்

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes