அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பேர்
  1. 1/4 கப்பு துவரம்பருப்பு
  2. 1 கப்பு பட்டாணி
  3. 1 சிறிய பெல்லி அளவு புளி
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 4 பல் பூண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. அரைக்க
  8. 2 ஸ்பூன் எண்ணெய்
  9. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. 1 ஸ்பூன் தனியா
  11. 2 வரமிளகாய்
  12. 1 ஸ்பூன் சீரகம்
  13. 1/2 ஸ்பூன் மிளகு
  14. 6 வெந்தயம்
  15. 2 ஸ்பூன் தேங்காய் பூ துருவல்
  16. தாளிக்க
  17. 2 ஸ்பூன் எண்ணெய்
  18. 1 ஸ்பூன் கடுகு
  19. 2 வரமிளகாய்
  20. சிறிதுகறிவேப்பிலை கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பட்டாணி துவரம்பருப்பு தனித்தனியாக வேக வைக்கவும் குக்கரில் 1விசில் விடவும்

  2. 2

    வேக வைத்த பட்டாணி துவரம்பருப்பு புளிக்கரைசல்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு தனியா சீரகம் மிளகு வரமிளகாய் வெந்தயம் தேங்காய் பூ துருவல் சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும்

  4. 4

    பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின்னர் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    சிறிது மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் ஊற்றி வேக விடவும் பின்னர் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  7. 7

    பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும் அடுத்து துவரம் பருப்பு பட்டாணி சேர்த்து நன்கு கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும்

  8. 8

    சுவையான பட்டாணி சாம்பார் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes