ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#combo 1
பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 5உருளைக்கிழங்கு
  2. 4 பெரிய வெங்காயம் நீளமாக வெட்டியது
  3. 6 பச்சை மிளகாய் நீளமாக வெட்டியது
  4. 2தக்காளி பொடியாக நறுக்கியது
  5. 4 பல் பூண்டு
  6. 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  7. 1 கை பொட்டுக்கடலை
  8. 5 ஸ்பூன் எண்ணெய்
  9. 1 ஸ்பூன் கடுகு
  10. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு
  11. 1 ஸ்பூன் சோம்பு
  12. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது
  13. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் பூண்டு இஞ்சி தக்காளி பச்சை மிளகாயை வெட்டி எடுத்து கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சோம்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    அடுத்து பச்சை மிளகாய், பூண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்

  5. 5

    உருளைக்கிழங்கு குக்கரில் 5 விசில் வந்ததும் இறக்கி நன்கு மசித்து விடவும் பின்னர் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து விடவும்

  6. 6

    பொட்டுக்கடலை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

  7. 7

    அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும் பின்னர் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும்

  8. 8

    சுவையான உருளைக்கிழங்கு மசால் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes