காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)

Golden Shankar
Golden Shankar @golden888

காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மசாலா விழுது அரைக்க
  2. 3 பற்கள்பூண்டு - நறுக்கியது
  3. 1 துண்டுஇஞ்சி - நறுக்கியது
  4. 2பச்சை மிளகாய் - நறுக்கியது
  5. 1 மேசைக்கரண்டிதேங்காய் - துருவியது
  6. 1 மேசைக்கரண்டி சில்லி பேஸ்ட் -
  7. புதினா இலை
  8. கொத்தமல்லி இலை
  9. 2 தேக்கரண்டிதண்ணீர்
  10. பிரியாணி செய்ய
  11. 1 கப்பாஸ்மதி அரிசி - (250 மில்லி கப்)
  12. 400 கிராம்காளான் -
  13. 2 மேசைக்கரண்டி நெய் -
  14. 1 மேசைக்கரண்டிஎண்ணெய் -
  15. 1பட்டை -
  16. 4கிராம்பு -
  17. 3 ஏலக்காய் -
  18. 1அன்னாசிப்பூ -
  19. 1 பிரியாணி இலை -
  20. 3வெங்காயம் - நறுக்கியது
  21. 3தக்காளி - நறுக்கியது
  22. 1 தேக்கரண்டிஉப்பு -
  23. 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் -
  24. 1தேக்கரண்டிதனியா தூள்
  25. புதினா இலை
  26. கொத்தமல்லி இலை
  27. 1 கப தண்ணீர் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவிடவும்.
    மிக்ஸர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய தேங்காய், சில்லி பேஸ்ட், புதினா, கொத்தமல்லி மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  2. 2

    குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்க்கவும்.
    பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பின்பு தக்காளியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
    அடுத்து உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு நறுக்கிய காளானை சேர்த்து வதக்கவும். பின்பு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்துவிடவும்.
    அடுத்து ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஆவி வர ஆரம்பித்ததும் விசிலை போட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.
    காளான் பிரியாணி தயார்!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Golden Shankar
Golden Shankar @golden888
அன்று

Similar Recipes