இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Combo3
இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4பேர்
  1. 2 கப் அரிசி
  2. 1/4மூடி தேங்காய்
  3. தேவையான அளவுஉப்பு
  4. தேங்காய் பால் எடுக்க:
  5. 1மூடி தேங்காய்
  6. 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  7. ஒரு சிட்டிகை உப்பு
  8. கொஞ்சம்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    அரிசியை நன்கு கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பின்னர் மிக்ஸி ஜாரில் தேங்காய் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மாவை ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து அரைத்த மாவை சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும்.

  4. 4

    பின்னர் மாவு சூடு ஆறியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து இடியப்பம் பிழியும் மசினில் வைத்து பிழிந்து எடுக்கவும்.

  5. 5

    பிழிந்த இடியப்பத்தை ஆவியில் ஐந்து நிமிடங்கள் மூடி வேக வைத்து எடுக்கவும். இப்போது மிருதுவான இடியாப்பம் தயார்.

  6. 6

    தேங்காய் பால் செய்ய:
    ஒரு மூடி தேங்காயை துண்டுகள் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வடித்து வைத்தால் தேங்காய் பால் தயார்.

  7. 7

    அதில் சர்க்கரை,ஏலக்காய் தூள் சேர்த்து கலந்தால், இடி யாப்பதிற்கு பொருத்தமான சுவையான சத்தான தேங்காய்பால் தயார்.

  8. 8

    இப்போது மிகவும் சுவையான ஆரோக்கியமான இடியாப்பம் தேங்காய் பால் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes