இடியாப்பம் தேங்காய் பால் (idiyappam and coconut milk recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#VT

இடியாப்பம் தேங்காய் பால் (idiyappam and coconut milk recipe in tamil)

#VT

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
5பேர்
  1. 1/2 கிலோ அரிசி மாவு
  2. 1 தேங்காய்
  3. 4டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  7. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி பேன் காற்றின் கீழ் போட்டு அரைமணி நேரம் ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பொடித்து எடுத்து மாவை சலித்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    சலித்து வைத்துள்ள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

  3. 3

    பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து கொதித்ததும், சலித்து தயாராக வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து கலந்து விடவும். இலேசாக உப்பு சேர்க்கவும்.மிதமான சூட்டில் வைத்து,ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

  4. 4

    கெட்டியானதும் மாவை எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு,கொஞ்சம் சூடு ஆறியதும் நன்கு பிசைந்து வைக்கவும்.

  5. 5

    பின்னர் மாவை உருட்டி ஆவியில் வேக வைத்து எடுத்து, சூடாக இருக்கும் போதே சந்தகை பிழியும் மெஷினில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை வைத்து, கீழே ஒரு பாத்திரம் வைத்து பிழியவும். அப்போது பஞ்சு போன்ற இடியாப்பம் பாத்திரத்தில் வந்து விழுகும்.

  6. 6

    இந்த மிருதுவான இடியாப்பத் துடன் சேர்த்து சாப்பிட தேங்காய் பால் மிகவும் சுவையாக இருக்கும். அதற்கு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும். அப்போது கெட்டியான தேங்காய் பால் கிடைக்கும்.

  7. 7

    பின்னர் அதில் கொஞ்சம் ஏலக்காய் தூள்,சர்க்கரை சேர்த்து இலேசாக சூடு செய்து எடுத்தால் சுவையான தேங்காய் பால் கிடைக்கும்.

  8. 8

    இப்போது விரதம் இருக்கும் நாட்களில் சாப்பிட மிகவும் அருமையான சுவையுடன் இடியாப்பம் தேங்காய் பால் தயார்.

  9. 9

    இதே மாவை ஓமபொடி பிழியும் ஆச்சில் பிழிந்தும் ஆவியில் வைத்து பயன்படுத்தலாம்.

  10. 10

    ஆனால் இடியாப்பம் செய்யும் மெஷினில் பிழிந்தால் தான் மிகவும் மிருதுவாக இருக்கும். இந்த முறையில் செய்த இடியப்பம் மாலை வரை அப்படியே மிருதுவாக இருக்கும்.

  11. 11

    இந்த இடியப்பத்தை எலுமிச்சை, தக்காளி, புளி, தயிர்,தேங்காய் சேர்த்து தாளிக்கலாம்.மிகவும் சுவையாக இருக்கும். இப்போது விரத நாட்களில் சாப்பிட மட்டும் செய்துள்ளதால் இடியாப்பம் தேங்காய் பால் செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes

More Recipes