மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்

Sowmya
Sowmya @vishalakshi

#vattaram
Week 5
இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 50 கிராம் மைதா மாவு
  2. 50 கிராம் கோதுமை மாவு
  3. 50 கிராம் ரவை
  4. 75 கிராம் நாட்டுச்சக்கரை
  5. அரை டம்ளர் காய்ச்சிய பால்
  6. 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 4ஏலக்காய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுதண்ணீர்
  10. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் 50 கிராம் மைதா மாவுடன் 50 கிராம் கோதுமை மாவு எடுத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    அதனுடன் 50 கிராம் ரவை சேர்த்து பிறகு 75 கிராம் கட்டி இல்லாத நாட்டுச்சக்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு கால் டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும்

  4. 4

    பிறகு முன்னதாகவே காய்ச்சி ஆற வைத்த அரை டம்ளர் பால் அதில் சேர்க்க வேண்டும்

  5. 5

    இப்போது எல்லாவற்றையும் நன்றாக கலக்கவேண்டும் கட்டி இல்லாதவாறு கரைக்க வேண்டும் தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளலாம்

  6. 6

    மாவை நன்றாக கலக்கிய உடன் அதில் இடித்த 4 ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்

  7. 7

    நாம் எந்த அளவு மாவு கலவையை கலக்கின்றோமோ அந்த அளவிற்கு அப்பம் மிகவும் மிருதுவாக இருக்கும் அதனால் ஒரு ஐந்து நிமிடம் மாவு கலவையை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்

  8. 8

    அப்பத்திற்கு நாம் கலக்கும் மாவானது மிகவும் தண்ணியாக இல்லாமல் மிகவும் கெட்டியாக இல்லாமல் இட்லிமாவு பதத்திற்கு இருக்க வேண்டும்

  9. 9

    ஐந்து நிமிடம் கலக்கிய பிறகு ஒரு மூடி போட்டு மூடி வைத்து 15 நிமிடங்கள் மாவை நன்றாக ஊற விடவேண்டும்

  10. 10

    15 நிமிடம் சென்ற பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடாகும் வரை பொறுத்திருக்கவும்

  11. 11

    எண்ணெய் சூடானதும் மாவை ஒரு முறை கலக்கி விட்டு ஒரு குழிக் கரண்டியால் ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவேண்டும்

  12. 12

    எண்ணெயில் மாவை ஊற்றிய உடன் அடுத்த சில நொடிகளிலேயே லேசாக வெந்து மேலே உப்பி வரும்

  13. 13

    அவ்வாறு உப்பி வந்த பிறகு அதனை மறுபுறம் திருப்பிப் போட்டுவிட்டு அடுத்த அப்பத்தை பக்கத்தில் ஊற்றலாம்

  14. 14

    இருபுறமும் பொன்னிறமாக வெந்தவுடன் எண்ணெயை நன்கு வடித்து விட்டு அப்பத்தை எண்ணெயிலிருந்து எடுத்து எண்ணெய் வடிதட்டில் சிறிது நேரம் வைத்து விடவேண்டும்

  15. 15

    இதோ மிகவும் ருசியான இனிப்பான மிருதுவான டீக்கடை இனிப்பு அப்பம் தயார் வாங்க சுவைக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes