முட்டை பிரியாணி

Sharanya
Sharanya @maghizh13
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. 4முட்டை
  2. 1கப் சீரக சம்பா அரிசி
  3. 1வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 2ஸ்பூன் மல்லி தூள்
  7. 1ஸ்பூன் பிரியாணி மசாலா
  8. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1/2 கப் தயிர்
  11. 1.5கப் தண்ணீர்
  12. கொத்தமல்லி
  13. புதினா
  14. 1ஸ்பூன் எண்ணெய்
  15. 2ஸ்பூன் நெய்
  16. தாளிக்க
  17. 1பிரிஞ்சி இலை
  18. 1துண்டு பட்டை
  19. 2ஏலக்காய்
  20. 2கிராம்பு
  21. 1பச்சை மிளகாய்
  22. 1/2ஸ்பூன் சீரகம்
  23. 1/2ஸ்பூன் சோம்பு
  24. அரைக்க
  25. 1துண்டு இஞ்சி
  26. 4பல் பூண்டு
  27. 1/2ஸ்பூன் சீரகம்
  28. 1/2ஸ்பூன்சோம்பு
  29. 1துண்டு பட்டை
  30. 2ஏலக்காய்
  31. 2கிராம்பு
  32. 1நட்சத்திர சோம்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முதலில் முட்டையை வேக வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, சீரகம்,சோம்பு, பட்டை,ஏலக்காய், கிராம்பு, நட்சத்திர சோம்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை சிம்மில் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கிளறி முட்டையை அதில் வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் அதில் நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும், பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். அதில் வைத்துள்ள தயிரை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின்னர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அரிசி, உப்பு சேர்த்து கிளறி வறுத்த முட்டைகளை சேர்த்து குக்கரை மூடி 2விசில் வந்ததும் இறக்கவும்

  6. 6

    பிரியாணி உடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes