பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

#kavitha
நான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேருக்கு
  1. 2 குடைமிளகாய்
  2. 200 கிராம் பன்னீர்
  3. 6வெங்காயம்
  4. 4தக்காளி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  5. 2பட்டை
  6. 2 கிராம்பு
  7. 2வாசனை இலை
  8. அரை டீஸ்பூன் சோம்பு
  9. 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  10. 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  12. ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  13. தேவையான அளவுசமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம் குட மிளகாயை லேசாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் அதே எண்ணனை அல்லது பட்டறையில் சிறிய சிறியதாக நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அதே வாணலியில் சிறிது பட்டர் சேர்த்து ஆரை டேபிள் ஸ்பூன் சோம்பு 2 பட்டை கிராம்பு வாசனை இலை வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்த தக்காளி விழுது கரம் மசாலா காஷ்மீரி மிளகாய்த்தூள் சிறிதளவு மல்லித்தூள் சீரகத்தூள் கால் டேபிள்ஸ்பூன் இதை அனைத்தையும் நன்கு வதக்கவேண்டும் பிறகு சிறிது எண்ணெய் பிரிந்து வரும் வரை நாம் மூடி போட்டு மூடி விட வேண்டும் பிறகு அதில் கெட்டியான தயிர் 2 டேபிள் ஸ்பூன் போட்டு வதக்கி விட வேண்டும்

  3. 3

    பிறகு தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள குடைமிளகாய் வெங்காயம் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து ஒரு பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும் கிரேவி கெட்டியாக பிறகு அரை டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் பட்டர் சேர்த்து சிறிது கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும்
    சுவையான பட்டர் குடைமிளகாய் பன்னீர் கிரேவி தயார் ஆகிவிட்டது நீங்களும் ருசித்துப்பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes